DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Tuesday, 10 July 2018

School Morning Prayer Activities - 11.07.2018 Daily Updates... )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

உரை:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்அல்லாமல்மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்கமுடியாது.

இன்று :

ஜூலை 11
உலக மக்கள் தொகை தினம் (World Population Day)

பழமொழி :

A good reputation is a fair estate

நற்குணமே சிறந்த சொத்து

பொன்மொழி:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீசந்திக்காமல் முன் செல்கிறாயோஅப்பொழுது தவறான பாதையில் நீபயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம்தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1..ISRO-ன் விரிவாக்கம்?
Indian Satellite Research Organization

 2.PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle

நீதிக்கதை :

நட்புக்குத் துரோகம் - ஈசாப் நீதிக் கதைகள்
(The Donkey, the Fox and the Lion Story)



அது ஒரு அடர்ந்த காடுஅந்த காட்டில் வசித்து வந்த நரியும்கழுதையும் சேர்ந்துஒரு உடன்படிக்கை செய்து கொண்டனஅதாவது நாள்தோறும் இருவரும்ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும்இரண்டு பேரில்யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும்மற்றவர் ஆபத்தை விலக்கப்போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரிதன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச்செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த காட்டின்வழியே சென்று கொண்டிருந்ததுசிறிது தூரம் சென்றதும்சிங்கம் ஒன்று அந்தநரியினை வழி மறித்ததுசிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியதுஎப்படியாவதுஉயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, "மன்னாதி மன்னாஅற்பப் பிராணியாகியஎன்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை.உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும்என் நண்பனாக,கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறதுஅதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக்கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன்அந்தக் கழுதைஇரண்டு மூன்றுநாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரிசிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின்இருப்பிடத்திற்குச் சென்றது.

"நண்பனேஇரை தேடச் செல்லலாமா?'' எனகழுதையை அழைத்துக்கொண்டுசிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையைசிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்துநிறுத்தியது நரிசிங்கம்கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றதுபிறகுசிங்கம்நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

  நரி பதறிப் போய், "மகாராஜாஎனக்குப் பதிலாகத் தானே கழுதையைக்காண்பிக்க வந்தேன்இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!''என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்பமுடியாதுநாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம்என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம்ஆகவே,உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே சிங்கம்,நரியையும் கொன்று வீழ்த்தியது.

நீதிகெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாதுஅவர்களால்உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

இன்றைய செய்தி துளிகள் :

1.உயர்கல்வி நிறுவனங்களுக்கு 1000 கோடி மானியம்அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் தகவல்

2.12-ம் வகுப்பில் 'ஸ்கில் டிரெய்னிங்'என்ற புதிய பாடம் இடம்பெறும்:பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

3.தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

4.தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் வெற்றிகரமாக மீட்பு : உலகம்முழுவதிலுமிருந்து குவிகிறது பாராட்டு

5.கால்பந்து - தொடர்ச்சியாக 4 வது முறையாக ஐரோப்பிய நாடுகளின்வசமாகும் உலக கோப்பை

No comments:

Post a Comment