விவேகசிந்தாமணி
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.
பொருள் : ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள்.
மலர்களிலுள்ள தேனையுண்ட கரிய வண்டுகள் மயங்கி வழியில் கிடந்தன. அவற்றைக் கண்ட
மங்கை அவற்றை நாவற் பழங்கள் என்று நினைத்து ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துக்
குனிந்து பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது அழகிய முகத்தை வானத்துச் சந்திரன் அருகில் வந்து விட்டது என்று எண்ணி விட்டது.
தான் கிடந்த அவளது சிவந்த கையைத் தாமரைமலர் என்று மயங்கி, சந்திரன் வந்தால் தாமரை மலர் குவிந்து விடுமே
எனப் பயந்து 'குப்'பென எழும்பிப் பறந்து விட்டது. அதைக் கண்ட மங்கை 'பறந்தது வண்டோ,
பழமோ? என்ன இது இது புதுமையாய்
இருக்கிறது!' என்று மயங்கினாளாம்.
No comments:
Post a Comment