DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Tuesday, 2 September 2014

புத்தாக்க அறிவியல் கண்காட்சி புதுகை கலெக்டர் துவக்கி வைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், புத்தாக்க அறிவியல் கண்காட்சியை கலெக்டர் மனோகரன் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை நகராட்சி, மார்த்தாண்டபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அறிவியல் தொழில்நுட்பத்துறை, புதுடில்லி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து நடத்திய, 2013-14ம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் விருது பெற்ற மாணவர்களின், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை, மாவட்ட கலெக்டர் மனோகரன் துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசு, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் இந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சார்ந்த, 282 மாணவர்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். மாணவர்களின் படைப்புகளில், முதல் பரிசு ஒரு மாணவனுக்கும், இரண்டாம் பரிசு இரண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் பரிசு மூன்று மாணவர்களுக்கும் மற்றும் ஆறுதல் பரிசுகள், 50 மாணவர்களுக்கும் என மொத்தம், 56 சிறந்த படைப்புகளை, 12 பேர் அடங்கிய அறிவியல் வல்லுநர் குழுவினர் தேர்வு செய்து அவற்றிலிருந்து மிகச் சிறந்த, 21 படைப்புகளை மாநில அளவில் நடைபெறும் கண்காட்சிக்கு தேர்வு செய்ய உள்ளனர். மாவட்ட அளவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் மனோகரன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்க பொறியாளர் அகிலன், அனைவருக்கும் கல்வி இயக்கம் முதன்மை கல்வி அலுவலர் கணேசன், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்லதுரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணிக்கம், சண்முகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சுசிலா, தாசில்தார் ரவிச்சந்திரன், ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜெயராஜ், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment