வரைபட விளக்கம்.
1. ல. நுனி நாவை முன் மேற்பல்லின் உள் பக்கம்
மென்மையாகப் படுமாறு வைத்து 'ல' வை
ஒலிக்க 'ல'கரம் வரும்.
2,3. ந,ன. இந்த இரு வேறு ந,ன எழுத்துகளையும்
மேற்கண்ட முறையிலேயே ந,ன என்று
ஒலிக்க சரியான எழுத்தோசை வரும்.
4. ர நுனி நாவை முன் மேற்பல்லின் உள்பக்கம்
லகர ஒலிப்புக்கு இன்னும் ஒருபுள்ளி
உள்புரம் தள்ளிப் பட்டும் படாமலும்,
தொட்டும் தொடாமலும் நாவால்
அதிரும்படி மென்மையாகக் காற்றை
வெளியிட்டு 'ர' ஒலிக்க 'ர'கரம் வரும்.
5. ற நுனி நாவை இன்னும் சற்று உள் பக்கம்
தூக்கி நாவை அதிரும் படியாக 'ற்றா...' எனக்
காற்றை அழுத்தமாக வெளியிட
'ற'கரம் வரும்.
6,7. ள,ண 'ள' ,'ண' ஒலிக்கு நுனி நாவை மேலும் உள்
பக்கம் நன்கு வளைத்து நடு அண்ணத்தில்
அழுந்தப் பதியுமாறு வைத்து 'ள' என
ஒலிக்க 'ள'கரம் வரும்: 'ண' என ஒலிக்க
'ண'கரம் வரும்
8. ழ,நா வை இன்னும் நன்றாக உள்பக்கம்
வளைத்து மேல் அண்ணத்தில்
நாதொடாமல் 'ழ்ழா' என்று
மென்மையாக காற்றை விட்டால்
அடிநாவின் இரு மருங்கும் மேல்
கடைவாய்ப் பற்களைத் தொட்டு
காற்றை வெளியேற்றும் போது நுனி
நாவை இயல்பான நிலைக்குக்
கொணரின் 'ழ'கரம் வரும்.

No comments:
Post a Comment