DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Tuesday, 10 April 2018

கையடக்க கணினியில் தேர்வு எழுதி ஆச்சரியப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்!!!



அரசு பள்ளி மாணவர்களின்திறமையினை வளர்க்கும் வகையில்கையடக்க கணினி மூலம் தேர்வுஎழுதும் முன்னோடி திட்டம்ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின்மூலம் தமிழக பள்ளிகளில்பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும்முறையில் பல்வேறு மாறுதல்கள்நடைமுறை படுத்தப்பட்டுவருகின்றனஇவற்றில் புத்தகங்கள்
இன்றி கையடக்க கணினி (டேப்மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின்மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளதுஇந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனஅவற்றில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியும் ஒன்றுஇந்த பள்ளியில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில்பயிலும் 81 மாணவ மாணவிகள் இன்று கையடக்க கருவி மூலம் தேர்வுஎழுதினர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி கூறுகையில்''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினிமூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஇதற்கென பயிற்சிபுத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளனஇந்த புத்தகங்களில் உள்ள பாடங்களைக்யூ.ஆர்  குறியீடு மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணிணியில்பதிவேற்றம் செய்யப்படும்இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில்இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்தகையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர்இன்று துவங்கிய தமிழ் தேர்வுஉள்ளிட்ட  அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுதஉள்ளனர்'' என்றார்.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசுஎடுத்து வரும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும்பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

No comments:

Post a Comment