DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Thursday, 18 December 2014

பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி

அமரடக்கி குறுவள மையத்தில் 18.12.2014 முதல் 20.12.2014  வரை பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி நடைபெறுகிறது. 18.12.2014 வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் ஆவுடையார்கோவில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர், ஒன்றிய மேற்பார்வையாளர், தாழனூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், அமரடக்கி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், விளானூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தாழனூர், அமரடக்கி, பூவளூர் தென்வயல்,பில்லுவலசை, நல்கிராமம், கூடலூர், மாரியூர், சுள்ளனி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர்கள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருமதி மாலதி மாரியூர் பள்ளியின் தலைமையாசிரியை ஆசிரிய பயிற்றுனராக கலந்து கொண்டு பயிற்சியை சிறப்பாக நடத்தினார். பயிற்சியில் ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு நீல.கிருஷ்ணன் அவர்கள் தன்னிடம் உள்ள கருத்துக்களை பகீர்ந்து கொண்டார்.  உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் பள்ளியில் செயல்பாட்டில் உள்ள கிராமக்கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அன்னையர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என விளக்கமாக கூறினார். தாழனூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது மனம் திறந்து பேசுங்கள். என்றும் சில வினாக்கள் கேட்டு பெற்றோர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். பயிற்றுனர் திருமதி மாலதி கட்டாய உரிமைச்சட்டம் பற்றியும் பள்ளி மேலாண்மைக்குழுவின் குறிக்கோள் பற்றியும் சிறப்பாக விளக்கிக் கூறினார். இறுதியில் ஒன்றிய மேற்பார்வையாளர் பயிற்சியின் நோக்கத்தைக் கூற பயிற்சி இனிதே நிறைவுற்றது.
19.12.2014 இரண்டாம் நாள் பயிற்சியை ஆசிரிய பயிற்றுனர் திருமதி சிவகாமி மற்றும் மாரியூர் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மாலதி அவர்கள் இணைந்து தன்சுத்தம் மற்றம் பள்ளியில் இருந்து வரும் மாணவனை அழைத்து பேசுதல் வகுப்பாசிரியரை சந்தித்து மாணவன் குறித்து பேசுதல் போன்ற நிகழ்வுகள் கலந்துரையாடப்பட்டது. இன்று மழை பெய்து கொண்டிருந்தபோதும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் கூடுதல் உதவிதொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்கள் அன்றைய பயிற்சி இனிதே நிறைவுற்றது. 
20.12.2014 மூன்றாம் நாள் பயிற்சியை ஆசிரிய பயிற்றுனர் திருமதி சிவகாமி மற்றும் மாரியூர் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மாலதி அவர்கள் இணைந்து பள்ளி மேம்பாட்டுத்திட்டம், பள்ளி மேலாண்மைக்கழு கண்காணிக்க வேண்டியவை, பள்ளிக்கல்வித்துறைக்கு உதவும் பிற துறைகள் மற்றும் குழுவின் பணிகள் பற்றி விளக்கி கூறினார்கள். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினரும் பள்ளியின் நடைமுறை பள்ளிக்கு தேவையானவை பற்றி பேசினார்கள் , இறுதியில் கனவு பள்ளி ஒவியமாக வரைந்தும் பயிற்சியின் குறை நிறைகள் எழுதப்பட்டு பயிற்றுனரிடம் வழங்கப்பட்டது. பின்பு உணவுப்படி மற்றும் பயணப்படி அனைவருக்கும் வழங்கப்பட்டு நாட்டுப்பண் பாடப்பெற்று பயிற்சி இனிதே நிறையுற்றது.

தி.நாகரெத்தினம்,
தலைமையாசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
விளானூர்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment